Govt Notification
சொத்து வரியை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
SimpliCity News Team File Photo · 21 Sept 2023
கோவை: சொத்துவரி தொகையினை ரொக்கம், கடன் மற்றும் பற்று அட்டை காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும், tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளாகளுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேற்படி சொத்துவரி தொகையினை ரொக்கம், கடன் மற்றும் பற்று அட்டை காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும், tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம்.
எனவே, மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மேற்காணும் வசதியினை முழுமையாக பயன்படுத்தி, 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான தங்களது சொத்துவரியினை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் வரை ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி ஆணையாளா் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Related stories
News
Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam
23 days ago
News
Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow
02 Jun 2026
News
Coimbatore Corporation Commissioner Inspects The New Amrut Drinking Water Project In Person!
08 Dec 2020